பந்தலூர்
பந்தலூர் தாலுகா அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், அரசு ஆஸ்பத்திரி ஆகியவை உள்ளன. இது தவிர அரசு, தனியார் பள்ளிகளும் செயல்பட்டு வருகிறது. இதற்காக பந்தலூருக்கு தினமும் ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர்.
இவர்கள் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள நெல்லியாளம் நகராட்சிக்கு சொந்தமான பயணிகள் நிழற்குடையில் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். ஆனால் அந்த நிழற்குடைக்குள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் முகாமிட்டு வருகின்றன. இதனால் பயணிகள் அவதி அடைகின்றனர். மேலும் அவை அசுத்தம் செய்துவிட்டு செல்வதால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே கால்நடைகளின் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.