தனி நலவாரியம் அமைக்க வேண்டும்

தனி நலவாரியம் அமைக்க வேண்டும்

Update: 2022-07-11 13:30 GMT

ஊட்டி

குன்னூர் மோட்டார் வாகனங்களை பழுது பார்ப்போர் முன்னேற்ற நலச்சங்கம் சார்பில், ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

குன்னூர் நகர பகுதியில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மோட்டார் வாகனங்களை பழுது பார்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். மலைப்பிரதேசத்திலும் கூட சாலை ஓரங்களில் அமர்ந்துதான் வேலை செய்து வருகிறோம். எனவே நாங்கள் வேலை செய்ய மானிய விலையில் எங்களுக்கு தனியாக இடம் ஒதுக்கி தர வேண்டும். மேலும் எங்களுக்கு நல வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்