ரேஷன் அரிசிக்கு தனித்தனி ரசீது வழங்கினால் காலதாமதம் அதிகரிக்கும்

ரேஷன் அரிசிக்கு தனித்தனி ரசீது வழங்கினால் காலதாமதம் அதிகரிக்கும்

Update: 2023-01-05 18:45 GMT

ஆனைமலை

தமிழக ரேஷன் கடை பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன், துணைத்தலைவர் ஜெகநாதன் ஆகியோர், ஆனைமலை தாசில்தார் அலுவலகத்தில் வட்ட வழங்கல் அதிகாரி காயத்ரியிடம் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

ரேஷன் கடைகளில் மத்திய, மாநில அரசுகள் வழங்கும் அரிசிகளுக்கு தனித்தனி ரசீது வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் எந்திரங்களில் 2 முறை பதிவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. ஏற்கனவே இணையதள பிரச்சினை உள்ளிட்ட காரணங்களால் பதிவு செய்து, ரேஷன் பொருட்கள் வழங்க காலதாமதமாகிறது. தற்போது அரிசி வழங்க 2 முறை பதிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால், அந்த காலதாமதம் மேலும் அதிகரிக்கும். இதனால் பொதுமக்களும், ரேஷன் கடை பணியாளர்களும் சிரமம் அடைவார்கள். எனவே பழைய முறையே தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் 500 ரேஷன் கார்டுகளுக்குமேல் உள்ள கடைகளில் கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும். இலவச வேட்டி-சேலைகளை கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்