கோத்தகிரி அருகே புகையிலை பொருட்களை விற்றவர் கைது

கோத்தகிரி அருகே புகையிலை பொருட்களை விற்றவர் கைது

Update: 2023-07-25 19:00 GMT

கோத்தகிரி

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என நேற்று கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் குணா தலைமையிலான போலீசார் கோத்தகிரி ஓரசோலை பகுதியில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள பால குமாரன் (33) என்பவரது கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீசார் அவர் விற்பனைக்காக வைத்திருந்த புகையிலைப் பாக்கெட்டுக்களையும் பறிமுதல் செய்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்