பெண்ணுக்கு அரிவாள் வெட்டு; கணவர் கைது
திசையன்விளையில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக அந்த பெண்ணின் கணவரை போலீசார் கைது செய்தனர்.
திசையன்விளை:
திசையன்விளையில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக அந்த பெண்ணின் கணவரை போலீசார் கைது செய்தனர்.
அரிவாள் வெட்டு
தூத்துக்குடி மாவட்டம் கொம்மடிக்கோட்டை சின்ராணிபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 35). இவருடைய மனைவி செல்வி (32). கருத்து வேறுபாடு காரணமாக செல்வி தனது கணவரை பிரிந்து திசையன்விளை மன்னர் ராஜா கோவில் தெருவில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் சுரேஷ், அவரது அண்ணன் தங்கராஜ் ஆகியோர் செல்வி வீட்டுக்கு சென்றனர். அப்போது இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த சுரேஷ், தங்கராஜ் ஆகிய இருவரும் சேர்ந்து செல்வியை அரிவாளால் வெட்டியுள்ளனர். அப்போது அதை தடுத்த செல்வியின் தாயார் அஞ்சனாதேவிக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.
கணவர் கைது
இதில் காயம் அடைந்த இருவரும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேசை கைது செய்தனர்.