வாலிபருக்கு அரிவாள் வெட்டு
வாலிபரை அாிவாளால் வெட்டிய நண்பர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.
மானூர்:
மானூர் அருகே உள்ள ராமையன்பட்டியை சேர்ந்த முருகன் மகன் முத்துகிருஷ்ணன் (வயது 24). இவரது நண்பர்கள் சரவணன் (27), குமார் என்ற குத்தாலக்குமார் (24), குரு என்ற பரமகுரு (24).
கடந்த சில நாட்களுக்கு முன்பு முத்துகிருஷ்ணன் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டு இருந்தார். அப்போது, அங்கு வந்த குரு, முத்துகிருஷ்ணனிடம் கஞ்சா கேட்டார். ஆனால் அவர் நான் கஞ்சா அடிப்பது இல்லை என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த குரு, முத்துகிருஷ்ணனின் மோட்டார் சைக்கிள் கண்ணாடியை உடைத்து, மிரட்டல் விடுத்துச் சென்றார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் முத்துகிருஷ்ணன் தனது வீட்டு முன்பு நின்று கொண்டு இருந்தார். அப்போது, அங்கு வந்த குரு உள்ளிட்ட 3 பேரும் அரிவாளால் முத்துகிருஷ்ணனை வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்தார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். இதை பார்த்த குரு உள்ளிட்ட 3 பேரும் அங்கு இருந்து தப்பிச் சென்றுவிட்டனர். பின்னர் அக்கம்பக்கத்தினர் முத்துகிருஷ்ணனை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் மானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி வழக்குப்பதிவு செய்து, குரு, சரவணன், குமார் ஆகிய 3 பேரை வலைவீசி தேடிவருகிறார்கள்.