வாலிபருக்கு அரிவாள் வெட்டு; மேலும் 2 பேர் கைது

தூத்துக்குடியில் வாலிபரை அரிவாளால் வெட்டிய வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-05-28 18:45 GMT

தூத்துக்குடி கதிர்வேல்நகரை சேர்ந்தவர் முகமது ஆரோன் (வயது 27). இவர் கட்டுமான தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் கதிர்வேல் நகர் பூங்கா அருகே தனது நண்பர்களுடன் நின்று பேசிக் கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 5 பேர் கும்பல் அவரை அரிவாளால் வெட்டியது. இதில் காயமடைந்த முகமது ஆரோன் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்பசாமி (25) செல்வகணேஷ் (21) ஆகிய இருவரை கைது செய்தனர். இந்த நிலையில் தலைமறைவான தூத்துக்குடி மில்லர்புரம் சிலோன் காலனியை சேர்ந்த முனீசுவரன் என்ற விஷ்ணு (20), மகாராஜன் என்ற பிளாக்கி (22) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்