வாலிபருக்கு அரிவாள் வெட்டு

மானூர் அருகே வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

Update: 2023-08-23 20:06 GMT

மானூர்:

மானூர் அருகே உள்ள கீழப்பிள்ளையார்குளம் குறிச்சி நகரை சேர்ந்தவர் ஆறுமுகவேல் மகன் கருப்பசாமி (வயது 25). இவருக்கும், அதே ஊரை சேர்ந்த கணபதி மகன் சசிகண்ணன் (25) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று கருப்பசாமி தங்கள் புதிய வீட்டின் கிரகப்பிரவேச நிகழ்ச்சியில் இருந்தார். அப்போது அவரை சசிகண்ணன் செல்போனில் தொடர்பு கொண்டு அருகிலுள்ள கோவிலுக்கு சமரசம் பேச அழைத்துள்ளார். அதன்பேரில் அங்கு சென்ற கருப்பசாமியிடம், அங்கிருந்த சசி கண்ணன் மற்றும் அதே ஊரைச் சேர்ந்த முருகன் மகன் மீனா ராஜா (25), மாரிமுத்து மகன் பூதப்பாண்டி (19) மற்றும் இருவர் சேர்ந்து தகராறு செய்ததுடன், கையில் இருந்த அரிவாளால் கருப்பசாமியை வெட்டியுள்ளனர். இதில் காயம் அடைந்த கருப்பசாமியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே, சசி கண்ணன் உள்ளிட்ட கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. காயமடைந்த கருப்பசாமியை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்