விபத்தில் பள்ளி மாணவன் பலி

திருவெண்காடு அருகே லாரி-மோட்டார் சைக்கிள் மோதிக் கொண்டதில் பள்ளி மாணவன் பலியானார்.

Update: 2022-09-30 18:45 GMT

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே திருவாளி மேல்பாதி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் மதன் (வயது 13). இவர் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று அதே பகுதியை சேர்ந்த கிருபானந்தன் (22) என்பவரும், மதனும் மோட்டார் சைக்கிளில் திருவாலி கடைவீதிக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து இருவரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் அங்குள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே வந்தபோது அந்த வழியாக வந்த லாரியும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராத விதமாக மோதிக் கொண்டன.

பள்ளி மாணவன் பலி

இதில், தூக்கி வீசப்பட்ட மதன் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த திருவெண்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த கிருபானந்தனை மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக கடலூர் மாவட்டம் வல்லம்படுகையை சேர்ந்த செந்தில் (50) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்