அருமனை அருகே சாலையில் ரப்பர் தோட்ட உரிமையாளர் பிணமாக கிடந்தார்.

அருமனை அருகே சாலையில் ரப்பர் தோட்ட உரிமையாளர் பிணமாக கிடந்தார்.

Update: 2023-07-15 18:45 GMT

அருமனை:

அருமனை அருகே சாலையில் ரப்பர் தோட்ட உரிமையாளர் பிணமாக கிடந்தார்.

மேல்புறம் அருகே உள்ள பாகோடு பகுதியை சேர்ந்தவர் சஜித் (வயது 52). இவருக்கு சொந்தமான ரப்பர் தோட்டம் மாங்கோடு பகுதியில் உள்ளது. சஜித் அடிக்கடி தோட்டத்துக்கு செல்வது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் காலையில் மோட்டார் சைக்கிளில் தோட்டத்துக்கு சென்றார். அங்கு மாலை வரை வேலை செய்துவிட்டு, அவருடன் வேலை செய்ய தொழிலாளர்களுக்கு ஊதியம் ெகாடுத்துள்ளார்.

பின்பு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். ஆனால் இரவு வெகுநேரமாகியும் வீடு வந்து சேரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் இரவு 8 மணியளவில் சஜித்தை தேடி தோட்டத்துக்கு புறப்பட்டனர்.

அவர்கள் தோட்டத்துக்கு செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அருமனை அருேக உள்ள அம்பலக்காலை என்ற இடத்தில் சாலையில் ஒருவர் மோட்டார் சைக்கிளுடன் கிடப்பதைக் கண்டனர். உடனே குடும்பத்தினர் அருகில் சென்று பார்த்த போது, சஜித் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த நிலையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரது சாவுக்கான காரணம் தெரியவில்ைல.

இதுகுறித்து அருமனை போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சஜித் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்து இறந்தாரா? அல்லது ஏதாவது வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றதா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதாவது காரணம் உண்டா? என விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த சஜித்துக்கு கோல்டன் பினு என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்