திருச்செந்தூரில் புதுப்பிக்கப்பட்ட சுதந்திர தின நினைவு இரும்பு வளைவு திறப்பு

திருச்செந்தூரில் புதுப்பிக்கப்பட்ட சுதந்திர தின நினைவு இரும்பு வளைவு திறப்பு விழா நடந்தது.

Update: 2023-07-04 18:45 GMT

திருச்செந்தூர்:

தமிழ்நாடு நுகர்வோர் பேரவை சார்பில் திருச்செந்தூரில் புதுப்பிக்கப்பட்ட சுதந்திர தின நினைவு இரும்பு வளைவு திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு முன்னாள் மாவட்ட நீதிபதி பிரபுதாஸ் தலைமை தாங்கி, இரும்பு வளைவை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன், நவதிருப்பதி சீனிவாசன் சேவை அறக்கட்டளை இயக்குனர் விஜயகுமார், அரசு வக்கீல் சாத்ராக், ஆத்தூர் நகர பஞ்சாயத்து தலைவர் கமால்தின், தமிழ்நாடு நுகர்வோர் பேரவை மாநில தலைவர் மோகனசுந்தரம், திருச்செந்தூர் வட்டார தலைவர் ரஹ்மத்துல்லா, மாவட்ட ஆலோசகர் கீதா சந்திரசேகரன், மாநில கவுரவ ஆலோசகர் முகமது ஜஹாங்கீர், மாவட்ட அமைப்பாளர் திருப்பதி விஜி, மாவட்ட செயலாளர் சண்முகநாதன், டாக்டர் வசந்த் சேனா உள்பட பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு நுகர்வோர் பேரவை மாவட்ட சட்ட ஆலோசகர் எட்வர்ட் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்