நூலகத்தில் வாசகர் வட்ட கூட்டம்
வீரவநல்லூர் நூலகத்தில் வாசகர் வட்ட கூட்டம் நடந்தது.
சேரன்மாதேவி:
வீரவநல்லூர் நூலகத்தில் மாதாந்திர வாசகர் வட்ட கூட்டம் நடைபெற்றது. தலைவர் ஆதம் இல்யாஸ் தலைமை தாங்கினார். உலகநாதன் முன்னிலை வகித்தார். செயலாளர் சந்திரசேகர் வரவேற்றார். கல்விக்கண் திறந்த காமராஜர் என்ற தலைப்பில் ராமன், சட்டம் அறிவோம் என்ற தலைப்பில் பாலஸ்ரீஹரன் ஆகியோர் பேசினார்கள். மேலும் மாணவர்களுக்கு வீரவநல்லூர் பேரூராட்சி துணைத்தலைவர் வசந்த சந்திரா பரிசுகளை வழங்கினார். திருநீற்றுச்செல்வன் வாழ்த்துரை வழங்கினார். முடிவில், பெரியார் பித்தன் நன்றி கூறினார்.