ஆ.ராசா சொத்து குவிப்பு வழக்கு 22-ந் தேதிக்கு தள்ளிவைப்பு -கோர்ட்டு உத்தரவு

ஆ.ராசா சொத்து குவிப்பு வழக்கு 22-ந் தேதிக்கு தள்ளிவைப்பு சென்னை சிறப்பு கோர்ட்டு உத்தரவு.

Update: 2023-02-09 00:35 GMT

சென்னை,

முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் 2015-ம் ஆண்டு சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.

விசாரணைக்கு பின்பு ரூ.5.53 கோடி அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக ஆ.ராசா மற்றும் அவரது நண்பர்களான கோவை ஷெல்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ரமேஷ், விஜய் சடரங்கனி ஆகியோர் மீது சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

கடந்த மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஆ.ராசா உள்ளிட்டோர் நேரில் ஆஜராகினர். அவர்களுக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.

இந்தநிலையில் நேற்று அந்த வழக்கு நீதிபதி கே.ரவி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆ.ராசா தவிர மற்றவர்கள் நேரில் ஆஜராகினர்.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்துவருவதால் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி ஆ.ராசா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.

பின்னர், வழக்கு விசாரணையை வருகிற 22-ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்