குலசேகரம் அருகே கால்வாயில் பூனையை விழுங்க முயன்ற மலைப்பாம்பு பிடிபட்டது

குலசேகரம் அருகே கால்வாயில் பூனையை விழுங்க முயன்ற மலைப்பாம்பு பிடிபட்டது.

Update: 2023-08-05 18:44 GMT

குலசேகரம், 

குலசேகரம் அருகே கால்வாயில் பூனையை விழுங்க முயன்ற மலைப்பாம்பு பிடிபட்டது.

மலைப்பாம்பு பிடிபட்டது

குலசேகரம் அருகே உள்ள வெண்டலிகோடு தாழவிளை பகுதியில் கால்வாயில் ஒரு மலைப்பாம்பு பூனையை சுற்றி வளைத்து பிடித்த நிலையில் விழுங்க முயன்று கொண்டிருந்தது. இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து குலசேகரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். நிலைய அலுவலர் செல்வமுருகேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அந்த பகுதிக்கு விரைந்து வந்து பூனையை விடுவித்து பாம்பை பிடித்தனர்.

இதற்கிடைேய பாம்பின் பிடியில் சிக்கியிருந்த பூனை இறந்தது. இதையடுத்து தீயணைப்புதுறையினர் பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அந்த பாம்பு சுமார் 10 அடி நீளம் இருந்தது. அதை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதியில் விட நடவடிக்கை மேற்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்