கால்நடை மருத்துவமனை அருகே மலைப்பாம்பு பிடிபட்டது

ஒடுகத்தூர் கால்நடை மருத்துவமனை அருகே 10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.

Update: 2023-07-25 12:12 GMT

ஒடுகத்தூர் கால்நடை மருத்துவமனையை சுற்றிலும் புதர்கள் மண்டி கிடக்கின்றது. இந்த நிலையில் நேற்று காலை சிகிச்சைக்காக ஓட்டி வந்த மாடு ஒன்றை புதர் அருகே கட்டியதாக தெரிகிறது. அந்த மாடு சுற்றி சுற்றி வந்து கத்தி உள்ளது. உடனே கால்நடை மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் மாட்டின் உரிமையாளர் அங்கு சென்று பார்த்தபோது சுமார் 10 அடி நீள மலைப்பாம்பு ஒன்று மாட்டை கடிப்பதற்காக வந்து கொண்டிருந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன் பேரில் ஒடுகத்தூர் தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மலைப்பாம்பை லாவாகமாக பிடித்து காப்பு காட்டில் விட்டனர். கால்நடை மருத்துவமனை பகுதியில் உள்ள புதர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என கால்நடை உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்