தோட்டத்தில் புகுந்த மலைப்பாம்பு

போடி-மூணாறு சாலையில் தோட்டத்தில் புகுந்த மலைப்பாம்பை தீயணைப்பு படையினர் பிடித்தனர்.

Update: 2023-03-12 19:00 GMT

போடி முந்தல் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவருக்கு அதே பகுதியில் சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு நேற்று காலை தோட்டத்துக்கு கார்த்திக் சென்றார். அப்போது மலைப்பாம்பு ஒன்று தோட்டத்துக்குள் புகுந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே போடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் தோட்டத்தில் புகுந்த மலைப்பாம்பை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரம் போராடி 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்தனர். பின்னர் அந்த பாம்பை வனத்துறையினரிடம் அவர்கள் ஒப்படைத்தனர். வனத்துறையினர் மலைப்பாம்பை பத்திரமாக கொண்டு சென்று போடி அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்