சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வீரவணக்க பொதுக்கூட்டம்
திருப்பத்தூரில் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வீரவணக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மறைந்த சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு வீரவணக்க பொதுக்கூட்டம் மற்றும் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி திருப்பத்தூர் பழைய பஸ் நிலையம் அருகே நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் சுந்தரேசன் தலைமை வகித்தார். ராஜா வரவேற்றார். காந்தியடிகள், பகத்சிங் உள்ளிட்ட சுதந்திர போராட்ட தியாகிகளின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. தேசிய கொடியை ராஜா கவுண்டர் ஏற்றி வைத்து பேசினார்.
கூட்டத்தில் சாமிக்கண்ணு, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் நந்தி, விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் முல்லை, மாதனூர் ஒன்றிய செயலாளர் வி.குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் முருகன் நன்றி கூறினார்.