விருதுநகரில் ஆர்ப்பாட்டம்
விருதுநகரில் முரசு கொட்டும் போராட்டம் நடைபெற்றது.
விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு திறன்மிகு இல்லா பணியாளர் சங்கத்தின் சார்பில் முரசு கொட்டும் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் முத்துக்குமார் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் செயலாளர் ஜெயக்குமார் கோரிக்கை விளக்க உரையாற்றினார். மாநில இணைச்செயலாளர் ஹபிபத்துல்லா போராட்டத்தை தொடங்கி வைத்தார். பல்வேறு அரசு அலுவலர் சங்க நிர்வாகிகள் வாழ்த்தி பேசினர். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் லியாகத் அலி சிறப்புரையாற்றினார். அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில துணைத் தலைவர் கண்ணன் நிறைவுறையாற்றினார். இப்போராட்டத்தின் போது நெடுஞ்சாலைத்துறையில் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். நெடுஞ்சாலைத்துறையில் முக்கிய சாலைகள், கிராம சாலைகளை தனியார் துறையின் பராமரிப்பில் விடுவதை கைவிட வேண்டும். இறந்தவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் உடனடியாக வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தப்பட்டது. முடிவில் சங்க பொருளாளர் ஆழ்வார் நன்றி கூறினார்.