ஜனாதிபதிக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம்
ஜனாதிபதிக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாகவும், பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள பா.ஜ.க. எம்.பி. மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் இளைஞர் அணி சார்பில் ஜனாதிபதிக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நேற்று மாலை நடந்தது. திருச்சி தலைமை தபால் நிலையம் முன்பு நடந்த இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் அஜீம் தலைமை தாங்கினார். இளைஞர் அணி மாவட்ட செயலாளர் மைதீன் அப்துல்காதர் முன்னிலை வகித்தார். போராட்டத்தின்போது மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக 100-க்கும் மேற்பட்ட அஞ்சல் அட்டைகள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.