விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி
ஆக்கூர் ஊராட்சியில் விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது
திருக்கடையூர்:
திருக்கடையூர் அருகே ஆக்கூர் ஊராட்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு வேளாண் கருவிகளான மண்வெட்டி, கடப்பாரை, இருப்பு சட்டி, கதிர் அறுக்கும் அரிவாள் உள்ளிட்டவை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரமோகன், தோட்டக்கலை உதவி அலுவலர் சுரேஷ், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சிங்காரவேலன் ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு வேளாண் கருவிகளை வழங்கினர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.