மதுராந்தகம் அரசு பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2022-09-15 10:43 GMT

இதில் வீராணம்குன்றம் அரசு மேல்நிலைப்பள்ளி, இரும்பேடு ஆதி திராவிடர் நலத்துறை மேல்நிலைப்பள்ளி, மதுராந்தகம் இந்து மேல்நிலைப்பள்ளி, நீர் பெயர் அருளப்பா மேல்நிலைப்பள்ளி என மொத்தம் 928 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு அரசு மகளிர் மேல்நிலைபள்ளி தலைமை ஆசிரியர் மைதிலி வரவேற்று பேசினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சந்திர பிரகாஷ் முன்னிலை வகித்தார். காஞ்சீபுரம் எம்.பி. செல்வம், உத்திரமேரூர் எம்.எல்.ஏ. சுந்தர் விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார்.

மாவட்ட கல்வி அலுவலர் சுகானந்தம், மதுராந்தகம் நகர மன்ற தலைவர் மலர்விழி குமார் வாழ்த்துரை வழங்கினார். முடிவில் இந்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், வெங்கட பெருமாள் நன்றி கூறினார்.

இதில் மதுராந்தகம் நகர தி.மு.க. செயலாளர் குமார், மதுராந்தகம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் பொன் சிவகுமார், மதுராந்தகம் நகராட்சி ஆணையாளர் அருள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்