அகத்தியருக்கு வெற்றிலை பாக்குவைத்து அழைக்கும் நிகழ்ச்சி

மாசிமக திருவிழாவிற்கு அகத்தியருக்கு வெற்றிலை பாக்குவைத்து அழைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-01-17 18:45 GMT

வேதாரண்யம்:

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மாசிமக திருவிழாவை முன்னிட்டு சுந்தரமூர்த்தி சுவாமிகள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி அகத்தியரை பாக்கு வைத்து அழைக்கும் நிகழ்ச்சி நடந்தது. சிவபெருமான் அகத்தியருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றும் விதமாக வேதாரண்யம் வந்து அவருக்கு திருமண கோலத்தில் காட்சி கொடுத்தார் என்பது ஐதீகம். இந்த ஐதீக நிகழ்ச்சி வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் சப்தமி திதி அன்று உச்சி காலத்தில் திருமண கோலத்தில் அகத்தியமுனிவருக்கு காட்சியளிக்கும் ஐதீக திருவிழா நடைபெறுகிறது. ஆண்டு தோறும் மாசிமக பெருவிழா மற்றும் தேரோட்டத்திற்காக அகத்தியமுனிவரை அழைப்பதற்காக மாட்டுப் பொங்கல் அன்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வேதாரண்யேஸ்வரர் கோவிலில் இருந்து ஊர்வலமாக சென்று அகத்தியர் கோவில்ல் உள்ள அகத்தியருக்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்