தையூர்தையல்நாயகி அம்மன் கோவில் தேரோட்டம்

தையூர் தையல்நாயகி அம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.

Update: 2023-05-07 18:45 GMT


செஞ்சி, 

செஞ்சியை அடுத்த தையூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற தடுத்தாண்டீஸ்வரர் உடனுறை தையல்நாயகி அம்மன் கோவில் உள்ளது. இங்கு சித்ரா பவுர்ணமியையொட்டி தேர்திருவிழா நடைபெற்றது. இதையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர், தடுத்தாண்டீஸ்வரர், தையல்நாயகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில், அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார்கள்.

தொடர்ந்து, அங்கு திரண்டிருந்த பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து, மீண்டும் நிலையை அடைந்தது. விழாவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தென்னரசு மற்றும் அனைத்து மகளிர் கூட்டமைப்பு, தமிழன் இளைஞர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக தையூர் கிராமத்தில் இரு தரப்பினிலேயே பிரச்சினை இருந்து வந்ததால் செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு கவின்னா மேற்பார்வையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதேபோன்று, செஞ்சி அருகே சிறுகடம்பூரில் உள்ள ஸ்ரீரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் பிரம்மோற்சவத்தில் தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு பூஜைகள் நடந்து, சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீரேணுகா பரமேஸ்வரி அம்மன், ஸ்ரீபரசுராமர் ஆகிய சாமிகள் தேரில் எழுந்தருளி வலம் வந்தனர். பின்னர் தீ மிதி திருவிழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் சிறுகடம்பூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்