மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

ஒடுகத்தூர் அருகே நடந்த மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Update: 2023-07-31 18:34 GMT

பாட்டாளி மக்கள் கட்சியின் 35-ம் ஆண்டு தொடக்கவிழா மற்றும் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் 85-வது பிறந்தநாள் விழாவையொட்டி மாரத்தான் ஓட்டம் ஒடுக்கத்தூர் அருகே உள்ள நேமந்தபுரத்தில் நடந்தது. மாநில துணைத்தலைவர் என்.டி.சண்முகம், வன்னியர் சங்க மாநில செயலாளர் ராஜா, மாவட்ட தலைவர் வெங்கடேசன், துணை செயலாளர் சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கு வேலூர் கிழக்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் இளவழகன் தலைமை தாங்கி மாரத்தான் ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். 6 கிலோ மீட்டர் தூரம் கொண்ட மாரத்தான் ஓட்டத்தில் இளைஞர்கள், இளம்பெண்கள் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு முறையே ரூ.10 ஆயிரம், ரூ.7 ஆயிரம், ரூ.5 ஆயிரம் ரொக்கப்பரிசு, பதக்கம், சான்றிதழ் ஆகியவற்றை பா.ம.க. செயலாளர் இளவழகன் வழங்கினார். மேலும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் அளிக்கப்பட்டது.

இதில் இளைஞரணி மாவட்ட செயலாளர் ஜெகன், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் சத்யமூர்த்தி, அணைக்கட்டு ஒன்றிய தலைவர் பாலகிருஷ்ணன், செயலாளர் சரவணன், துணை செயலாளர் ஜெகன், பேரூராட்சி செயலாளர் ராம்ராஜ், அன்புமணி தம்பிகள் படைத்தலைவர் சாய், முன்னாள் தொண்டரணி தலைவர் மூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்