10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவனுக்கு பரிசு
அரக்கோணத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவனுக்கு நகரமன்ற தலைவர் லட்சுமி பாரி பரிசு வழங்கினார்.
அரக்கோணத்தில் உள்ள அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளியில் தமிழ் வழி கல்வியில் பயின்ற எஸ்.தாமோதரன் 10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 464 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தார்.
இதையடுத்து மாணவன் வீட்டிற்கு அரக்கோணம் நகரமன்ற தலைவர் லட்சுமி பாரி நேரில் சென்று பொருளாதார வசதியின்மையையும் பொருட்படுத்தாமல் படித்து முதல் மதிப்பெண் பெற்றதற்கு பாராட்டி, மேற்கொண்டு படிபதற்கான உதவிகளை செய்வதாக தெரிவித்தார். மேலும் மாணவனுக்கு சால்வை அணிவித்து பாராட்டி பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது மாணவனின் பெற்றோர் உடனிருந்தனர்.