கல்லூரி மாணவியை கரம்பிடித்த தனியார் நிறுவன ஊழியர் பாதுகாப்பு கேட்டு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம்

கல்லூரி மாணவியை கரம்பிடித்த தனியார் நிறுவன ஊழியர் பாதுகாப்பு கேட்டு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சமடைந்தார்.

Update: 2023-06-24 18:45 GMT

விக்கிரவாண்டி தாலுகா சிந்தாமணி கிராமத்தை சேர்ந்தவர் மோனிகாதேவி (வயது 19). இவர் விழுப்புரத்தில் உள்ள அரசு மகளிர் கலைக்கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரும் அதே கிராமத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான சிலம்பரசன் (24) என்பவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களின் காதல் விவகாரம் தற்போது இரு வீட்டாரின் பெற்றோருக்கும் தெரியவரவே அவர்கள், இந்த காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மோனிகாதேவிக்கு அவரது பெற்றோர் வேறோரு இடத்தில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தனர். இந்நிலையில் கடந்த 20-ந் தேதி மோனிகாதேவியும், சிலம்பரசனும் வீட்டை விட்டு வெளியேறி மறுநாள் (21-ந் தேதி) ஆலம்பாடியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்துகொண்டனர். இதையறிந்த மோனிகாதேவியின் உறவினர்கள், சிலம்பரசனை தொடர்புகொண்டு மிரட்டி வருவதாக கூறப்படுகிறது. இதனால் நேற்று காலை இருவரும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்து அங்கிருந்த போலீஸ் அதிகாரிகளிடம், தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கக்கோரி மனு கொடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்