தடுப்பு கட்டையில் மோட்டார் சைக்கிள் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி

தடுப்பு கட்டையில் மோட்டார் சைக்கிள் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.

Update: 2023-08-18 20:19 GMT

மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி (வயது 54). இவர் திருச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் பாலாஜி நேற்று தனது மோட்டார் சைக்கிளில் திருச்சியில் இருந்து சமயபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். நம்பர் ஒன் டோல்கேட் ஒய் ரோடு அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோர சிமெண்ட் தடுப்பு கட்டையில் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த பாலாஜி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்