கார் மோதி தனியார் நிறுவன ஊழியர் சாவு

ஆற்காடு அருகே கார் மோதி தனியார் நிறுவன ஊழியர் இறந்தார்.

Update: 2023-04-20 15:31 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை கூட்ரோடு அல்லாளச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் பூவரசன் (வயது 20). இவரது நண்பர் கலவை அடுத்த வேம்பி பகுதியைச் சேர்ந்த ராஜ்கிரண் (28). இவர்கள் சோளிங்கரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் ராஜ்கிரண், பூவரசன் ஆகிய இருவரும் மோட்டார்சைக்கிளில் ஆற்காடு நோக்கி வந்துள்ளனர். கீராம்பாடி அருகே வந்தபோது எதிரே வந்த கார் ராஜ்கிரண் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது.

இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு பூவரசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த ராஜ்கிரண் ஆற்காடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முதலுதவி பெற்று மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்த புகாரின் பேரில் ஆற்காடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியைச் சேர்ந்த கார் டிரைவர் சாமிநாதன் என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்