சாலை வசதி இல்லாததால் ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்ற நிறைமாத கர்ப்பிணி

ஏலகிரி மலையில் சரியான சாலை வசதி இல்லாததால் பிரசவத்திற்காக நிறைமாத கர்ப்பிணி ஒருவர் ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றார்.

Update: 2022-08-20 17:15 GMT

ஏலகிரி மலையில் சரியான சாலை வசதி இல்லாததால் பிரசவத்திற்காக நிறைமாத கர்ப்பிணி ஒருவர் ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றார்.

சாலை வசதி இல்லை

ஏலகிரி மலையில் சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ள அத்தனாவூர் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. ஏலகிரி மலையில் வசிக்கும் அனைத்து மக்களும் இங்குதான் மருத்துவச் சிகிச்சைக்காக வருகின்றனர். ஆனால் இங்கு இரவில் டாக்டர்கள் இருப்பதில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனால் ஏலகிரி மலையில் இரவு நேரங்களில் கர்ப்பிணிகள் மற்றும் அவசர சிகிச்சை தேவைப்படுவோர் சிகிச்சை பெற முடியாமல் மிகவும் அவதிப்படுகின்றனர். இந்த நிலையில் ராயனேரி கிராமம் கீழ்க்காடு வட்டம் பகுதியை சேர்ந்த சிவசங்கர் என்பவரது மனைவி சிவரஞ்சனிக்கு (வயது 24) பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. சரியான சாலை வசதி இல்லாததால் ஆம்புலன்ஸ் வரவில்லை.

நடந்து சென்றார்

இதனால் நிறைமாத கர்ப்பிணியான அவர் கீழ்க்காடு பகுதியில் இருந்து சுமார் 1 கிலோமீட்டர் தூரம் வரை நடந்து சென்று மெயின் சாலையை அடைந்துள்ளார். பின்னர் ராயனேரி கிராமத்தில் இருந்து ஆட்டோ மூலம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றுள்ளார்.

தற்போது சிவரஞ்சனி அத்தனாவூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனவே குண்டு குழியுமாக உள்ள சாலையை சீரமைத்து, 24 மணி நேரமும் ஆம்புலன்ஸ் வசதி செய்து தரவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்