தோல் கழிவுநீரை பாலாற்றில் விட்ட தொழிற்சாலை மின் இணைப்பு துண்டிப்பு

வாணியம்பாடி அருகே தோல்கழிவு நீரை நேரடியாக பாலாற்றிலும், நிலங்களிலும் விட்ட தோல் தொழிற்சாலை மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. உடனடியாக கம்பெனியை மூட மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-06-23 17:59 GMT

பாலாற்றில் கலப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பெரும்பாலான தொழிற்சாலைகள் கழிவுநீரை நேரடியாக பாலாற்றில் விடுவதாகவும், இதனால் மாசு ஏற்பட்டு பாலாற்றில் மீன்கள் செத்து மடிவதாகவும், தொடர்ந்து விவசாயமும் பாதிக்கப்படுவதாக பொதுமக்களும், விவசாயிகளும் புகார் கூறி வந்தனர்.

கடந்த வாரம் மாராபட்டு என்ற இடத்தில் பாலாற்றில் நூற்றுக்கணக்கான மீன்கள் செத்து மிதநத்து. இதனை கண்ட அப்பகுதி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து இதே நிலைமை நீடிப்பதால் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தொழிற்சாலைகளில் இருந்து கழிவுகள் நேரடியாக பாலாற்றில் கலக்கிறதா என ஆய்வுகள் மேற்கொண்டனர்.

மின் இணைப்பு துண்டிப்பு

அப்போது வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தோல் தொழிற்சாலையில் இருந்து நேரடியாக பைப் லைன் மூலம் பாலாற்றில் கழிவுநீர் விடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த கம்பெனிக்கு அளிப்பட்டு இருந்த மின் இணைப்பை துண்டிக்கவும், கம்பெனியை உடனடியாக மூடவும் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி கோபாலகிருஷ்ணன் உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்