சாலையின் நடுவே அபாய பள்ளம்
தேத்தாக்குடி தெற்கு ஊராட்சியில் சாலையின் நடுவே அபாய பள்ளத்தை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரியாப்பட்டினம்:
தேத்தாக்குடி தெற்கு ஊராட்சியில் சாலையின் நடுவே அபாய பள்ளத்தை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அபாய பள்ளம்
வேதாரண்யத்தை அடுத்த தேத்தாக்குடி தெற்கு ஊராட்சியில் செட்டித்தெரு உள்ளது. இந்த தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த தெருவில் உள்ள சாலையில் தினமும் வாகனங்கள் சென்று வருகின்றன.
மேலும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் சென்று வருகின்றனர். இந்த சாலையின் நடுவே அபாய பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழும் அபாயம் உள்ளது.
சீரமைக்க வேண்டும்
இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிள் செல்பவர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் கீழே விழுந்து விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பு சாலையின் நடுவே உள்ள அபாய பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.