கார் மோதி போலீஸ் ஏட்டு பலி
உளுந்தூர்பேட்டையில் கார்மோதி போலீஸ் ஏட்டு பலி
உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தவர் முருகன்(வயது 55). இவர் நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் உளுந்தூர்பேட்டை-திருச்சி மெயின் ரோட்டில் ரோந்து பணியில் இருந்தபோது சாலையை கடக்க முயன்றார். அப்போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி அதி வேகமாக வந்த கார் முருகன் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து எடைக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.