லாரி மோதி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் படுகாயம்

கே.வி.குப்பம் அருகே லாரி மோதி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் படுகாயம் அடைந்தார்.

Update: 2023-01-29 16:33 GMT

குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் பரந்தாமன் (வயது 54). இவர் கே.வி.குப்பம் அருகே பனமடங்கி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் குடியாத்தம்-காட்பாடி தேசிய நெடுஞ்சாலையில் குடியாத்தத்தில் இருந்து காட்பாடி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். ே.வி.குப்பம் அருகே வேப்பங்கநேரி பகுதியில் தனியார் திருமண மண்டபம் அருகில் சென்றபோது, முன்னால் சென்றுகொண்டு இருந்த லாரி திடீரென நின்றதால், நிலை தடுமாறி லாரியில் மோதி தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து கே.வி.குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்