வீட்டிற்குள் புகுந்த விஷப்பாம்பு பிடிபட்டது
வீட்டிற்குள் புகுந்த விஷப்பாம்பு பிடிபட்டது.
இலுப்பூர் ஓலைமான்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது வீட்டிற்குள் விஷப்பாம்பு புகுந்தது. இதுகுறித்து அவர் இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் முருகேசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து விஷப்பாம்பை உயிருடன் பிடித்து வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.