முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70 ஆண்டு கால வாழ்க்கையை விளக்கும் புகைப்பட கண்காட்சி 19-ந் தேதி நடக்கிறது- - அமைச்சர் மூர்த்தி தகவல்

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் 70 ஆண்டு கால வாழ்க்கையை விளக்கும் புகைப்பட கண்காட்சி 19-ந் தேதி நடைபெறுகிறது என்று அமைச்சர் மூர்த்தி கூறினார்.

Update: 2023-03-15 21:26 GMT


முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் 70 ஆண்டு கால வாழ்க்கையை விளக்கும் புகைப்பட கண்காட்சி 19-ந் தேதி நடைபெறுகிறது என்று அமைச்சர் மூர்த்தி கூறினார்.

ஆலோசனை கூட்டம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70 ஆண்டு கால வாழ்வை விளக்கும் வகையில் மதுரை திருப்பாலை திடலில் புகைப்பட கண்காட்சி நடத்தப்பட உள்ளது. இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் திருப்பாலை திடலில் நேற்று நடந்தது. அதில் வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமை தாங்கினார். மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி, தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முதல்- அமைச்சரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் வகையில் புகைப்பட கண்காட்சியை அமைப்பது, அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்களை அழைத்து வருவது, சிறப்பு விருந்தினரை அழைத்து கண்காட்சியை தொடங்கி வைப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. அதில் ஏராளமான தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அழைப்பு

கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி பேசியதாவது:-

வருகிற 19-ந் தேதி பிரமாண்டமான முறையில் முதல்-அமைச்சரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் புகைப்பட கண்காட்சி நடத்தப்பட உள்ளது. அதில் முதல்-அமைச்சர் சொல்லும் சிறப்பு விருந்தினர் மூலம் புகைப்பட கண்காட்சி தொடங்கப்பட உள்ளது. இந்த புகைப்பட கண்காட்சியில் அனைவரும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படும். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்