சாராயம், கஞ்சா பதுக்கி வைத்திருந்தவர் கைது
சாராயம், கஞ்சா பதுக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
திண்டிவனம்,
திண்டிவனம் அடுத்த ரோஷனை பகுதியில் சாராயம், கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு புகார் சென்றது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின்பேரில் திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் மேற்பார்வையில் ரோஷனை போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னக்கொடி மற்றும் போலீசார் ரோஷனை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ரோஷனை காலனி பகுதியை சேர்ந்த ராஜூ மகன் கிடங்கிலான் என்கிற சரண்ராஜ்(வயது 34) என்பவர் வீட்டின் பின்புறம் சாராயம், கஞ்சா மற்றும் மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து சரண்ராஜை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சா, 430 லிட்டர் சாராயம், 64 மதுபாட்டில்கள், ரூ.5 ஆயிரம், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.