புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தவர் கைது
விழுப்புரத்தில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தவர் கைது செய்தனா்.
விழுப்புரம்:
விழுப்புரம் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரணிநாதன் தலைமையிலான போலீசார், மேல்முத்தாம்பாளையம் கிராமத்தில் உள்ள ஒரு கடையில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே கடையில் இருந்தவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் அதே கிராமத்தைச் சேர்ந்த சத்தியசீலன் (வயது 49) என்பதும், இவர் தனது கடையில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து சத்தியசீலனை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள 6 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.