ஆத்தூர்
ஆத்தூர் அருகே தாண்டவராயபுரம் தபால் அலுவலக வீதியை சேர்ந்தவர் சுபா ரத்தினம். இவருக்கு சொந்தமான கட்டிடத்தில் டைல்ஸ் கடை இயங்கி வருகிறது. முதல் மாடியில் கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. நேற்று காலை கட்டிடம் கட்டும் பணியில் தாண்டவராயபுரம் கோனார் தெருவை சேர்ந்த பிரதீப்குமார் (வயது 29) வேலை பார்த்து வந்தார். அப்போது அந்த வழியாக சென்ற உயர்அழுத்த மின்கம்பி மீது பிரதீப்குமார் கை பட்டுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட பிரதீப்குமார் காயம் அடைந்தார். அவரை ஆத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆத்தூர் ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.