தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றவர் கைது
தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றவர் கைது செய்யப்பட்டார்.
சிவகாசி,
சிவகாசி ரிசர்வ்லைன் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 59). இவர் சம்பவத்தன்று சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்துக்கு வந்துள்ளார். அப்போது அவரது கையில் கொண்டு வந்த 1 லிட்டர் பெட்ரோலை தலையில் ஊற்றிக்கொண்டு தனக்கு வாழ பிடிக்கவில்லை, சாகப்போகிறேன் என்று கூறி உள்ளார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை மடக்கி பிடித்து தண்ணீரை ஊற்றி அவரை காப்பாற்றினர்.
பின்னர் அவரை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் மாயகிருஷ்ணன், போலீஸ் அதிகாரியிடம் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் கணேசன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.