கடையில் பணம் திருடியவர் கைது

கருமத்தம்பட்டியில் கடையில் பணம் திருடியவர் கைது செய்யப்பட்டாார்.

Update: 2022-09-08 16:27 GMT

கருமத்தம்பட்டி

கோவையை அடுத்த சூலூரை சேர்ந்தவர் முத்துவேல். இவர் சூலூரில் மளிகை கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு முத்துவேல், தனது கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். மறுநாள் வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது ரூ.2000 பணம் திருட்டு போனது தெரிய வந்தது.

இது போல் அங்குள்ள முத்துவின் கடையிலும் திருட்டு சம்பவம் நடைபெற்றது தெரியவந்தது. இதை முத்துவேலின் மகன் சங்கர் பார்த்து உள்ளார். இதையடுத்து அவர், சூலூர் புதிய பஸ் நிலையத் தில் சந்தேகத்துக்கு இடமாக நின்ற நபரை பிடித்து சூலூர் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் அவர் சூலூரை சேர்ந்த ரஞ்சித் (21) என்பதும், அவர் முத்துவேலின் கடையை உடைத்து பணம் திருடிய தும் தெரிய வந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்