நிலக்கரி சுரங்கத்தில் தாமிர கம்பி திருடியவர் கைது
நெய்வேலியில் நிலக்கரி சுரங்கத்தில் தாமிர கம்பி திருடியவர் கைது செய்யப்பட்டாா்.
மந்தாரக்குப்பம், அக்.4-
நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான 2-வது சுரங்கத்தில் மத்திய பாதுகாப்பு படை அதிகாரி ராஜசேகர், ரோந்துப்பணி மேற்கொண்டார். அப்போது தாமிர கம்பி திருடிய ஒருவரை பிடித்து, மந்தாரக்குப்பம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில் அவர், வடலூர் அருகே உள்ள கல்லுக்குழி கிராமத்தை சேர்ந்த தண்டபாணி(வயது 57) என்பதும், ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள தாமிர கம்பி மற்றும் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள கப்லர் கேபிள் ஆகியவற்றை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் திருடிய பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.