புகையிலை பொருட்களை விற்றவர் கைது
தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் கடைவீதியில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பல்வேறு புகார் வந்தது. அதன்ேபரில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது தா.பழூர் கடைவீதியில் பெட்டிக்கடை நடத்தி வரும் குமார் (வயது 52) என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான ஹான்ஸ், குட்கா, பான் மசாலா ஆகியவற்றை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த ரூ.3 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.