புகையிலை பொருட்களை விற்றவர் கைது
புகையிலை பொருட்களை விற்றவர் கைது செய்யப்பட்டார்.
விராலிமலை ஒன்றியம், பேராம்பூர், ஆவூர், ஆம்பூர்பட்டி நால்ரோடு, மலம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட பல்வேறு புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பல்வேறு புகார் வந்தது. அதன்பேரில் மாத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் முருகையன் தலைமையிலான போலீசார் நேற்று அப்பகுதிகளில் கண்காணித்தனர். அப்போது ஆம்பூர்பட்டி நால்ரோட்டில் மளிகை கடை வைத்துள்ள சுரேஷ் (வயது 33) என்பவர் தனது கடையில் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த ரூ.1,230 மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.