வீட்டில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தவர் கைது
கோவில்பட்டியில் வீட்டில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி மேற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாதவராஜ் தலைமையில் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் நாராயணசாமி, முருகன் மற்றும் போலீசார் காந்தி நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது ராமசாமி தெருவில் உள்ள கோட்டைசாமி மகன் செண்பகராஜ் (வயது 52) என்பவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 786 பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக செண்பகராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.