மதுபாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்தவர் கைது
மதுபாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டாா்.
கடத்தூர்
கடத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார் எலத்தூர் செட்டிபாளையம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள டாஸ்மாக் கடை அருகே சந்தேகப்படும் வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். உடனே அவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், 'அவர் கள்ளக்குறிச்சியை சேர்ந்த பாண்டிதுரை (வயது 28), டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை வாங்கி விற்பனைக்காக வைத்திருந்ததும்,' தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பாண்டிதுரையை போலீசார் கைது செய்ததுடன், அவரிடம் இருந்து 25 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.