காணை,
விழுப்புரம் அருகே தெளி ரெயில்வே நிலையம் அருகில் காணை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தவர்களை போலீசார் சுற்றி வளைத்தபோது 3 பேர் தப்பி ஓடிவிட்டனர். ஒருவர் மட்டும், போலீசாரிடம் பிடிபட்டார். விசாரணையில் அவர், விழுப்புரம் வழுதரெட்டியை சேர்ந்த குபேரன் (வயது 28) என்பது தெரிந்தது. இதையடுத்து குபேரனை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.