ஜல்லி குவியலில் மோட்டார் சைக்கிள் ேமாதியதில் கீழே விழுந்தவர் சாவு
ஜல்லி குவியலில் மோட்டார்சைக்கிள் மோதியதால் கீழே விழுந்த வேன் டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
ஆரணி அருகே சாலை அமைக்க குவிக்கப்பட்டிருந்த ஜல்லி குவியலில் மோட்டார்சைக்கிள் மோதியதால் கீழே விழுந்த வேன் டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
வேன் டிரைவர்
ஆரணியை அடுத்த அரையாளம் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி என்பவரின் மகன் சுகுமார் (வயது 25). மினி வேன் டிரைவராக வேலை செய்து வந்தார்.
சம்பவத்தன்று இரவு பணி முடிந்ததும் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
வடுகசாத்து மின்வாரிய அலுவலகம் அருகே சாலை பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையோரம் மணல், ஜல்லி கொட்டப்பட்டிருந்தது.
அங்கு எச்சரிக்கை பலகையும் வைக்காத நிலையில் இருளாக இருந்தது. இந்த நிலையில் மோட்டார்சைக்கிள் ஜல்லி குவியல் மீது மோதியது.
சாவு
இதில் நிலைதடுமாறியதில் கீழே விழுந்த சுகுமார் படுகாயம் அடைந்தார். அந்த வழியாக வந்தவர்கள் சுகுமாரை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் அங்கு சிகிச்சை பலனின்றி சுகுமார் இறந்து விட்டார்.
இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசில் சுகுமாரின் தந்தை முனுசாமி புகார் அளித்தார். அதன்பேரில் ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபால் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்த சுகுமாருக்கு அனிதா என்ற மனைவியும், சதீஷ் என்ற ஒரு வயது மகனும் உள்ளனர். ஜல்லி குவிலில் மோட்டார்சைக்கிள் மோதியதில் சுகுமார் கீழே விழுந்து இறந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.