ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்தவர் படுகாயம்
ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்தவர் படுகாயம்
கிணத்துக்கடவு
கோவை சக்தி விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் சீனிவாசன்(வயது 54). எலெக்ட்ரீசியன். இவர் கடந்த 14-ந் தேதி வேலை நிமித்தமாக மலுமிச்சம்பட்டியில் இருந்து கிணத்துக்கடவு அருகே உள்ள தாமரைகுளம் செல்ல தனியார் பஸ்சில் ஏறினார். கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் சென்றாம்பாளையம் பிரிவு அருகே சென்றபோது, படிக்கட்டில் வந்து நின்ற அவர், ஓடும் பஸ்சில் இருந்து திடீரென தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே பஸ்சை நிறுத்தி சக பயணிகள் அவரை மீட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் தனியார் பஸ் டிரைவரான செட்டிபாளையத்தை சேர்ந்த மாரிமுத்து(41) என்பவர் மீது கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.