கூரியர் மூலம் வாடிக்கையாளர்களுக்கு புகையிலை வினியோகம் செய்தவர் கைது

கூரியர் மூலம் வாடிக்கையாளர்களுக்கு புகையிலை வினியோகம் செய்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-05-23 19:51 GMT

திசையன்விளை:

திசையன்விளை மோகன காந்தி தெருவை சேர்ந்தவர் கட்டேரி பெருமாள். இவரது மகன் முத்து (வயது 29). இவர் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின்பேரில் தனிப்படை போலீஸ் மற்றும் திசையன்விளை போலீசார் அவரது வீடு மற்றும் முருகேசபுரத்தில் அவர் வசித்து வரும் வீடுகளில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது முருகேசபுரம் வீட்டில் விற்பனைக்கு வைத்து இருந்த 12 கிலோ புகையிலையை பறிமுதல் செய்து, முத்துவை கைது செய்தனர். விசாரணையில் அவர் வாடிக்கையாளர்களுக்கு புகையிலையை கூரியர் மூலம் வினியோகம் செய்தது தெரியவந்தது.

Tags:    

மேலும் செய்திகள்