திருவட்டார் அருகே பலாக்காய் பறிக்க மரத்தில் ஏறியவர் தவறி விழுந்து பலி

திருவட்டார் அருகே பலாக்காய் பறிக்க மரத்தில் ஏறியவர் தவறி விழுந்து பலியானார்.

Update: 2022-07-08 18:25 GMT

திருவட்டார், 

திருவட்டார் அருகே பலாக்காய் பறிக்க மரத்தில் ஏறியவர் தவறி விழுந்து பலியானார்.

தவறி விழுந்து பலி

திருவட்டார் அருகே உள்ள பேரை குப்பத்துறையை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (வயது 57). இவர் தேனீ வளர்த்து தேன் உற்பத்தி தொழில் செய்து வந்தார். இவருக்கு மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர்.

நேற்று காலையில் சுந்தர்ராஜ் வீட்டின் முன்பு நிற்கும் பலாமரத்தில் காய்த்திருந்த பலாக்காயை பறிப்பதற்காக ஏறினார். அப்போது, கால் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சுந்தர்ராஜ் இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து அவரது மனைவி காட்வின் ஷீலா கொடுத்த புகாரின் பேரில் திருவட்டார் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்